தோஷங்களை போக்கும் பரிகார ஸ்தலங்கள்

இந்த உலகில் மனிதராக பிறந்த அனைவருமே வாழ்வில் ஏற்படும் இன்ப, துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது இறைவன் விதித்த கட்டளை ஆகும். அதையடுத்து நம் வாழ்வில் ஏற்படும் தோஷங்கள், துன்பங்களைப் போக்க எந்தெந்த மாவட்டங்களில் அமைந்துள்ள கோயில்களுக்கு சென்று வழிபட்டால் தோஷங்கள், துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்பதை பார்க்கலாம்.

நீண்ட காலமாக திருமணம் நடைபெறாமல் இருப்பவர்கள், திருமணஞ்சேரி, திருவீழிமிழலை ஆகிய இரு தளங்களுக்கு சென்று வழிபடலாம்.

குழந்தைப்பேறு வேண்டுவோர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவெண்காடு சென்று வழிபடலாம்.

நாகதோஷம் உள்ளவர்கள், திருநாகேஸ்வரம், சங்கரன்கோயில் சென்று வழிபடலாம்.

மூட்டு வலி போன்ற தீராத நோய்கள் நீங்க, வைத்தீஸ்வரன் கோயில் (நாகை மாவட்டம்), சூரியனார் கோயிலை ஒட்டியுள்ள திருமங்கலக்குடி (தஞ்சாவூர்) சென்று வழிபடலாம்.

மனநோய் தீர கோவை மாவட்டத்தில் உள்ள திருமுருகன் பூண்டி சென்று வழிபட வேண்டும்.

குருவருள் பெற (குருஸ்தலம்), ஆலங்குடி (திருவாரூர்), திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம்) சென்று வழிபட வேண்டும்.

தீமைகள் யாவும் தொலைந்திட, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

பிறவியற்ற நிலையை அடைய திருவாரூர், திருவண்ணாமலை, சிதம்பரம் சிவன் கோயில்களை வழிபட வேண்டும்.

கடன் தொல்லை தீர்ந்து நிம்மதி பெற திருச்சேறை ரண ருண ஈஸ்வரரை வழிபட வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்கு திருக்கருகாவூர் கர்ப்பரட்சகாம்பிகை மற்றும் குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரரை வணங்குதல் வேண்டும்.

பித்ரு தோஷம் எனப்படும் முன்னோர்களை வழிபடத் தவறியவர்களுக்கு ஏற்படும் தீவினைகளுக்கு ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமியை வழிபடலாம்.

செவ்வாய் தோஷம் நீங்க வைத்தீஸ்வரன் கோயில் சென்று வழிபட வேண்டும்.

விஷக்கடி நிவாரணத்திற்கு சங்கரன் கோயில் சங்கரநயினார் மற்றும் சிவகங்கையில் உள்ள நயினார் கோயில் சென்றும் வழிபடலாம்.

வழக்குகளில் வெற்றியடைய அய்யாவாடி பிரத்யங்கிரா, திருப்புவனம் சென்றும் வழிபடலாம்.

சனி தோஷம் நீங்கி சுபிட்சம் பெற திருநள்ளாறு (காரைக்கால்), திருக்கொள்ளிக்காடு (தஞ்சாவூர்) சென்று வழிபடலாம்.

தேவிப்பட்டனத்தில் உள்ள ஸ்ரீராம பிரான் வழிபட்ட நவக்கிரகங்களை வழிபட்டு பிறகு இராமேஸ்வரம் சென்று வழிபட்டால் ராகு தோஷம் மட்டும் இல்லாமல் அனைத்து வகையான தோஷங்கள் நீங்கும்.

ஸ்ரீகாளஹஸ்தி காளத்திநாதரின் உருவில் ராகுவும், ஞான பிரசசூணதேவியின் உடலில் கேதுவும் இருப்பதாக ஐதீகம். அதனால்தான் சூரிய, சந்திர கிரகணக் காலங்களில் அனைத்து கோயில்களும் மூடப்பட்டாலும் இக்கோயிலை மட்டும் மூடுவதில்லை.

இக்கோயிலுக்கு செல்லும் அமைப்பே ராகு, கேது ராசிமண்டலத்தில் அப்பிரதட்சணமாக இயங்கி வருவதுபோல இக்கோயில் வழி சுற்றும் அப்பிரதட்சணமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ராகுவினால் மனச்சோர்வு கொண்டவர்கள் திருப்பாம்புரம் தலத்திற்கு சென்று வந்தால் உடனடியாக ராகுதோஷம், மனச்சோர்வு நீங்கி ராகுவின் அருள் கிடைக்கிறது.

நாகர்கோவிலில் உள்ள நாகநாதர் கோயில் நாகராஜனை ஆயில்ய நட்சத்திரன்று வழிபட நாக தோஷம் நீங்கும்.

ஜாதகத்தில் ராகு சுக்ரன் இணைந்தவர்கள் புதுக்கோட்டையில் உள்ள புவனேஸ்வரி கோயிலில் இருக்கும் ஸ்ரீ அஷ்டதஜபுஜ மகாலெட்சுமி துர்க்காதேவியை வழிபட்டால் சிறப்பான பலன்கள் அடையலாம்.

ஜாதகத்தில் ராகு செவ்வாய் இணைந்தவர்கள் ஸ்ரீஅரியநாச்சியம்மன் கோயிலில் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை காணலாம்.

சிதம்பரம் தில்லைகாளி, உறையூர் வெக்காளி, சிவகங்கை வெட்டுடையகாளி, மடப்புரம் பத்திரகாளி போன்ற காளி அன்னையை வழிபட்டாலும் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெறலாம்.

திருவள்ளூர் அருகில் உள்ள திருவாலங்காட்டில், முஞ்சிகேசமுனிவரும், கார்கோடகனும் வழிபட்ட வண்டார் குழலம்மை உடனுறை ஊர்த்துவ தாண்டவரை வணங்கி வர வளம் பெருகும்.

நாக,புத்திர,மாங்கல்ய தோஷங்கள் நீங்க நாச்சியார் கோயில் சென்று கல் கருடனை வழிபட வேண்டும்.

கடும் வியாதிகளில் இருந்து விடுபட கும்பகோணம் பாணபுரீஸ்வரர், வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் ஆகியோரை வழிபட வேண்டும்.

பிரிந்த தம்பதியர் ஒன்று சேர கும்பகோணம் ஆதி வராகப் பெருமாளை தரிசித்து வழிபட வேண்டும்.

குழந்தைகளின் நோய், தோஷங்கள் தீர சிவபுரம் எனப்படும் திருச்சிவபுரம் ஈஸ்வரனை வழிபட வேண்டும்.

விஷக்கடியில் இருந்து நிவாரணம் பெற அழகாபுத்தூர் சங்கு சக்கிர முருகனை வழிபட வேண்டும்.

எந்த தோஷத்திற்கு எந்த ஸ்தலம் செல்வது சிறப்பு என்று உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அறிந்திட பகிர்ந்திடுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on