தோஷங்கள், சாபங்கள் என்றால் என்ன? அவையெவை?

ஒருவர் அறிந்தோ அறியாமலோ ஒரு பாவகாரியத்தை செய்வதன் மூலமாக ஏற்படுவதே தோஷமாகும். அதேபோல், ஒரு பாவத்தை ஒருவர் செய்யும்போது அதனால் பாதிப்படைந்தவர், வேதனையுடன் அல்லது கண்ணீருடன் சபிப்பது தான் சாபமாகும். அதையடுத்து, இந்த தோஷங்கள், சாபங்கள் எப்படி ஏற்படுகின்றன, அதன் வகைகள் யாவை, அவை எத்தனை வகைப்படும், அவை யாவை என்று தெரிந்து கொள்வோம்.

தோஷங்களும், சாபங்களும்

முன் ஜென்மத்தில் செய்த பாவங்களினால் ஏற்படும் வினைகளே தோஷங்களாகும்.

அத்தகைய தோஷம் முன் ஜென்மாவில் இருந்தும் தொடரும் அல்லது தற்போதைய பிறவியில் செய்த பாவத்தில் இருந்தும் தொடரும்.

அவ்வாறு ஏற்படுகின்ற தோஷங்களை தகுந்த பரிகாரம் செய்து நிவர்த்தி செய்வது சுலபமாகும்.

ஆனால், ஒருவரது சுய நலத்திற்காக அல்லது ஆதாயத்திற்காக மற்றவர் பாதிப்படைந்து வயிறு எரிந்து சபிப்பதே சாபமாகும்.

இதில் பாதிப்படைந்தவர் மன்னித்தால் மட்டுமே அந்த சாபத்திற்கு விமோச்சனம் கிடைக்கும்.

இல்லையென்றால், பாவம் செய்தவருக்கு விமோசனம் கிடைப்பது மிகவும் சிரமமாகும்.

வினை பயிர்

முற்பகல் செய்வின் பிற்பகல் விளையும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.

அவ்வாறு விளைந்து அறுவடைக்கு தயாராக காத்திருக்கும் வினை பயிர்களே தோஷங்கள் என்பதால், எதை விதைத்தோமா, அதையே அறுவடை செய்யமுடியும் என்பது காலம், காலமாக நடப்பதாகும்.

இதில் முற்பிறவியில் ஒருவர், உடன் பிறந்தவர்கள், தாய், தந்தை, மற்றும் மனைவிக்கு முன் ஜென்மத்தில் செய்த பாவங்கள் தற்போது பாதிப்பை ஏற்படுத்தும். அதுவே அவ யோக தோஷம் எனப்படும்.

அதையடுத்து, இந்த தோஷம், சாபங்களை இந்த பிறவியில் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

இந்நிலையில், தோஷங்கள் வஞ்சித தோஷம், பந்த தோஷம், கல்பித தோஷம், வந்தூலக தோஷம், ப்ரணகால தோஷம் என்று 5 வகைப்படும்.

தோஷங்கள்

1. கால தோஷம், 2. கிரக தோஷம், 3. ராகு தோஷம், 4. கேது தோஷம், 5. செவ்வாய் தோஷம், 6. சனி தோஷம், 7. பித்ரு தோஷம், 8. மாங்கல்ய தோஷம், 9. புத்திர தோஷம், 10. மனை தோஷம், 11. விருட்ச தோஷம், 12 சர்ப்ப தோஷம், 13. பட்சி தோஷம், 14. மிருக தோஷம், 15. ரிஷி தோஷம், 16. தேவ தோஷம், 17 களத்திர தோஷம், 18. கண் திருஷ்டி, 19. தீய எண்ண தாக்குதல், 20. தீய சக்திகளால் தாக்குதல், 21. பொறாமை போன்றவைகளாகும்.

சாபங்கள்

1) பெண் சாபம், 2) பிரேத சாபம், 3) பிரம்ம சாபம், 4) சர்ப்ப சாபம், 5) பித்ரு சாபம், 6) கோ சாபம், 7) பூமி சாபம், 8) கங்கா சாபம், 9) விருட்ச சாபம், 10) தேவ சாபம், 11) ரிஷி சாபம், 12) முனி சாபம், 13) குலதெய்வ சாபம் போன்றவைகளாகும்.

கர்மவினையின் மூலமாக வரும் தோஷம், சாபம் போன்றவைகளின் பாதிப்பில் இருந்து நீங்குவதற்கு வீட்டில் கருங்காலி விநாயகர், கருங்காலி லிங்கம், கருங்காலி வேல், கருங்காலி முருகன் போன்ற சிலைகளை வீட்டில் வைத்து வணங்குவது நல்லது.



Follow Us on