பல் வலிக்கு சிறந்த வைத்திய முறைகள்

மனித உடலில் ஒவ்வொரு பாகங்களும் ஒவ்வொரு விதத்தில் முக்கியமானதாகும். அதில், பல் வலி வரும்போது, அதனை யாராலும் தாங்கி கொள்ளமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து, பல் வலிக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய வைத்திய முறைகள் குறித்து அனைவரும் தெரிந்து வைத்து கொள்வது மிகவும் நல்லது. அத்தகைய எளிய வைத்திய முறைகள் குறித்து பார்க்கலாம்.

கிராம்பு

இரண்டு கிராம்புகளை பல் வலி உள்ள இடத்தில் வைத்து சிறிது நேரம் கடித்திருந்தால், பல்வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்

உப்பு

ஒரு கோப்பை வெதுவெதுப்பான வெந்நீரில் ஓரு டீஸ்பூன் கல் உப்பைக் கரைத்து, லேசான சூட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் ஊற்றி கொப்பளித்து துப்பிவிடவும். இவ்வாறு தினமும் செய்து வர, பல்வலி மற்றும் வீக்கம் குறையும். மேலும் உப்பு நீரினால் கிருமிகளும் அழியும்.

பூண்டு

ஒரு பல் பூண்டை நசுக்கி வலி உள்ள இடத்தில் வைக்க பல்வலி படிப்படியாக குறையும். பூண்டில் அல்லிசின் என்ற நோயை எதிர்க்கும் இரசாயனப் பொருள் உள்ளதால் பல்வலி நீங்குகிறது.

கோதுமைப்புல் சாறு

கோதுமைப்புல் சாற்றினை அருந்தி வர பல் வலி விலகும்.

வெங்காயம்

பச்சை வெங்காயத்தை கடித்து மென்று சாற்றை விழுங்க பல் வலி குறையும். பச்சை வெங்காயத்திலுள்ள காரத்தன்மையானது பல்லிலுள்ள கிருமிகளை அழிப்பது மட்டுமல்லாமல் பல் சொத்தையையும் தடுக்கும்.

கொய்யாப்பழ இலை

வீட்டில் கொய்யா மரம் இருந்தால் இரண்டு இலைகளைப் பறித்து வாயில் போட்டு மென்று, அதன் சாறை வாயில் சில நிமிடங்கள் இருக்கும்படி செய்து வர பல்வலி நீங்கும்.

ஐஸ் கட்டிகள்

ஐஸ் கட்டிகளை வலியுள்ள இடத்தில் வைத்து எடுக்க சிறிது நேரத்தில் பல் வலி குறைந்து, வீக்கமும் வற்றிவிடும்.

கால்சியம் உணவுகள்

பல் வலி உள்ளவர்கள் அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான உணவை தவிர்க்கவும். கால்சியம் சத்துக்கள் நிரம்பிய உணவு வகைகளை உண்ணவும். நெல்லிக்காய், பால், வெண்ணை, எலுமிச்சை போன்றவற்றை முறையாக உண்டு வர பற்கள் பலமடையும்.

நல்லெண்ணெய்

காலையில் எழுந்தவுடன் நல்லெண்ணெயை சிறிது வாயிலிட்டு 15 நிமிடங்கள் கொப்பளித்து துப்பி விடவும். இவ்வாறு சில நாட்கள் செய்ய வாயிலுள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.

இஞ்சி சாறு

இஞ்சிச்சாற்றை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளித்து வர பல் வலி குறையும். சுக்கு பொடியை வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்தி விட பல் வலியை போக்கும்.

சூடம்

சூடத்தை பல் வலி இருந்த இடத்தில் வைத்து கடித்தால், சிறிது நேரத்தில் பல் வலியானது நின்றுவிடும்.

சொத்தை பல்லை உருவாக்கும் நோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றலை கொண்டுள்ள பாகற்காய் போன்று எண்ணற்ற நோய் நீக்கும் காய்களும் கீரைகளும், பழங்களும் பயன்களும் என்ற உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான புத்தகங்களை உங்கள் வீட்டில் எப்போதும் வைத்திருக்க இங்கே அழுத்தவும்

அடிக்கடி பல்வலி ஏற்படுபவர்களுக்கு பல்வலிக்கு தீர்வு கூறும் இக்கட்டுரையை அனுப்பி பயனடைய செய்யுங்கள்.(ஷேர்)



Follow Us on