
முதலில் சந்திராஷ்டம நேரத்தில் ஒரு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை. பொதுவாக சந்திரன் இருக்கும் இடமே ஒருவரின் இராசி. அதாவது 12 இராசிகளில் எந்த இராசியில் சந்திரன் இருக்கிறாரோ அதுவே பிறக்கும் உயிரின் அல்லது குழந்தையின் இராசியாகும். உதாரணமாக, சிம்ம ராசி அன்பர்களுக்கு சிம்மத்தில் சந்திரன் இருப்பார். இதே போல ஒவ்வொரு இராசிக்கும் நீங்கள் யூகித்துக் கொள்ளுங்கள். இந்நிலையில் பிறக்கும் குழந்தை சந்திராஷ்டமத்தில் எப்படிப் பிறக்க முடியும்? இது நிச்சயம் நடக்காத ஒன்று. காரணம், பிறக்கும் அந்தக் குறிப்பிட்ட நாளில் எந்த கட்டத்தில் சந்திரன் இருக்கிறதோ, அதுவே குழந்தையின் இராசியாக மாறிவிடும் பட்சத்தில், எப்படி சந்திராஷ்டமத்தில் ஒரு குழந்தை பிறக்க இயலும்?
சந்திராஷ்டமம் காணப்பட்டால்
ஒருவேளை குழந்தையின் பெற்றோரில் ஒருவருக்கு அல்லது இருவருக்குமே குழந்தை பிறக்கும் சமயத்தில் சந்திராஷ்டமம் காணப்பட்டால், அது அப்பெற்றோரை பாதிக்க இடம் உண்டு. எதிர்காலத்தில் அக்குழந்தை அதன் பெற்றோருக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விடும். ஆனால், இதிலும் கூட ஒரு விதிவிலக்கு உண்டு. தேய்பிறை சந்திராஷ்டமம் கெடுதல் செய்யாது. வளர்பிறையில் வரும் சந்திராஷ்டமம் கடுமையாக பாதிக்கும். அந்த வகையில் தேய்பிறை சந்திராஷ்டமத்தை பற்றி கவலைப்படத் தேவையில்லை.
பரிகாரம்
சந்திராஷ்டமம் உள்ள நாளில் நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாருக்காவது இனிப்பை பரிமாறி விட்டு, தைரியமாக தவிர்க்க முடியாத எந்தக் காரியத்தையும் செய்யலாம். இனிப்பு குரு பகவானின் (பிரகஸ்பதியின் அல்லது வியாழனின்) சுவை. குரு பகவான் சந்திரனுக்கே குருவாவார். இந்நிலையில் அவரது சுவையை பரிமாறி, அந்த நாளில் தவிர்க்க முடியாத அந்த முக்கிய காரியத்தில் ஈடுபடலாம். இதனால் பெரிய பாதிப்புகள் அகலும்.