பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஒருவர் எழுந்து குளித்து முடித்து, தனது செயல்களை தொடங்கினால் அது வெற்றியில் முடிவடையும் என்பது பலருக்கும் தெரிந்த நிலையில், அப்போது சொல்ல வேண்டிய மிக முக்கியமான மந்திரம் பற்றியும், அதன் பலன் பற்றியும் அறிந்திடுவோம்.
பிரம்ம முகூர்த்தம்
நாள்தோறும் காலையில் புதிதாக எழுந்திருப்பதே ஒவ்வொருவருக்கும் மறுபிறவி போன்றதாக கருதப்படுகிறது.
அவ்வாறு சிருஷ்டி தொழிலை செய்பவர் பிரம்மா என்பதால், பிரம்மாவின் பெயரைக்கொண்டே அதிகாலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று கூறுகின்றனர்.
இந்த பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வாரம், நட்சத்திரம், யோகம், தோஷம் எதுவும் கிடையாது.
அதனால், இந்த பிரம்ம முகூர்த்த நேரம் என்பது எப்போதும் சுப வேளையாகவே கருதப்படுகிறது.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து இறை வழிபாடு செய்து வேலைகளை செய்ய தொடங்கினால் அன்று முழுவதும் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதனால்தான், வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் பலரும் இந்த அதிகாலை நேரத்திலேயே எழுந்திருந்து தங்கள் வேலைகளை தொடங்குகின்றனர்.
பிரம்ம முகூர்த்தத்தில் தேவர்கள், தேவதைகள், சிவபெருமான், மகாவிஷ்ணு, மகாலட்சுமி, பிரம்மா ஆகியோர் அருள்புரிவதாக ஐதீகம்.
இந்நேரத்தில் தெய்வங்களின் பார்வை படும்போது துன்பங்கள் அனைத்தும் மறைந்து விடும்.
வீட்டில் இருந்த கஷ்டம், கடன் தொல்லை தீரும், சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.
கணவன், மனைவியிடையே ஒற்றுமை அதிகரிப்பதுடன், பல மடங்கு புண்ணியத்தையும் கொடுக்கும்.
பிரம்ம மந்திரம்
பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து பிரம்மனை முறையாக வழிபடுபவர்களுக்கு கோடீஸ்வர யோகமும், திடீர் அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதை வாழ்வில் அனுபவித்தவர்கள் பலர் உண்டு, ஆனால் இந்த இரகசியத்தை யாரும் வெளியில் சொல்ல மாட்டார்கள்.
அதிகாலை நேரத்தில் எழுந்து பணி செய்பவர்கள் பலரும் செல்வந்தரான பின்னர், தங்கள் நிலையை மாற்றிக்கொள்வதுண்டு.
அதிகாலை நேரத்தில் பிரம்ம தேவருடைய காயத்ரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த மந்திரத்தை தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து 108 முறை உச்சரித்து வந்தால் கேட்ட வரம் கேட்டபடி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பிரம்ம காயத்ரி மந்திரம்:
ஓம் வேதாத்மகாய வித்மஹே
ஹரண்ய கர்ப்பாய தீமஹி
தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்!!!
சூரிய உதயத்திற்கு முன்பாக காலை 04:30 மணி முதல் 06:00 மணி வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து வாய் கொப்பளித்து, முகம் கழுவி, வாசல் பெருக்கி, கோலமிட்டு பின்னர் பூஜை அறையில் அமர்ந்து பிரம்ம காயத்ரி மந்திரத்தை 108 முறை தொடர்ந்து உச்சரிக்க வேண்டும்.
இந்த மந்திரத்தை உச்சரித்து முடிக்கும் வரை பிரம்ம தேவரை நினைத்து வேண்டிக்கொள்ள வேண்டியது கிடைக்கும்.
சூரிய பகவானுக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த பிரம்ம முகூர்த்த வழிபாட்டை செய்து வர, தலையெழுத்து விரைவில் மாறுவதை அனுபவித்து தெரிந்து கொள்ளலாம்.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து வழிபடுபவர்களுக்கு கிடைக்கும் யோகத்தை உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள் (ஷேர் செய்யுங்கள்).