download_indicator

அஷ்டாங்க யோகங்களும், அஷ்ட சித்திகளும்

அஷ்ட சித்திகள் எனப்படும் எட்டு வகையான அஷ்டமா சக்திகள் பெற்றவர்களே சித்தர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர்கள் என்று அர்த்தமாகும். இவர்கள் அஷ்டாங்க யோகம் மூலமாக அஷ்ட சித்திகளை பெற்றதால், இறைவனுக்கு நிகரானவர்களாக கருதப்படுகிறார்கள். அதையடுத்து, அஷ்டாங்க யோகங்களும், அஷ்ட சித்திகளும் என்னவென்று அறிந்திடுவோம்.

அஷ்டாங்க யோகங்கள்

ஆன்மீகத்தில் உயர்வான நிலை மற்றும் உடல் ஆரோக்கியத்தை அடைந்திடும் வகையில், பதஞ்சலி முனிவர் தனது யோக சூத்திரங்களில் அஷ்டாங்க யோகத்தை பற்றி குறிப்பிடுகிறார்.

அஷ்டாங்கம் என்றால் எட்டு மூட்டுகள் அல்லது உடல் பாகங்கள் என்று அர்த்தமாக கருதப்படுகிறது.

பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே அஷ்டாங்க யோகத்தைப் பற்றி பதஞ்சலி முனிவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு வகையான யோகங்களே அஷ்டாங்க யோகங்களாகும்.

இயமம்

இந்து மதத்தில் உள்ள வாய்மை, உண்மை, பிற உயிர்களை கொல்லாமை, களவு கொள்ளாமை, தூய்மை, ஆசையின்மை போன்ற நெறிமுறைகளை கூறுகிறது.

நியமம்

தனிமனித வாழ்வில் உள்ள சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டுமென்று தெரிவிக்கிறது.

ஆசனம்

ஆசனங்கள் என்பது தியானத்திற்கான வழிமுறைகளை குறிப்பிடுகிறது.

பிராணாயாமம்

ஒருவரது சுவாச செயல்முறைகளையும், பயிற்சிகளையும் குறிப்பிடுகிறது.

பிரத்தியாகாரம்

ஒருவரது மனதை உள்முகமாக திருப்பி, உணர்ச்சிகளின் விளைவுகளை தணிப்பதாகும்.

தாரணை

பிரத்தியாகாரம் மூலம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்துவதே தாரணையாகும்.

தியானம்

தாரணை மூலம் மனதை ஒருமுகப்படுத்திய பிறகு, உண்மையான அறிவை அடைவதில் கவனம் செலுத்துவதே தியானமாகும்.

சமாதி

தியானத்தில் இருந்தபடியே, விழிப்புணர்வு மூலமாக ஆசை பற்றுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் நிலையே சமாதியாகும்.

அஷ்ட சித்திகள்

அணிமா, மஹிமா, லஹிமா, கரிமா, பிராப்தி, பிரகாமியம், வசித்துவம், ஈசத்துவம் என்பதே அஷ்டமா சித்திகளாகும்.

இத்தகைய அஷ்ட சித்திகளை பெற்ற சித்தர்களுக்கு இயற்கையும் கட்டுப்படும்.

அஷ்டாங்க யோக பயிற்சியினால் அஷ்டமா சித்திகளை பெற்ற சித்தர்கள் இறைவனை போன்றே விருப்பு, வெறுப்பின்றி, ஆசை எதுவுமின்றி இறைவனை போன்றே எந்த நேரமும் தியானத்திலேயே ஆழ்ந்திருப்பார்கள்.

அஷ்ட சித்திகளை மனிதர்களால் ஒருக்காலும் பெறவே முடியாது.

ஒருவேளை மிதமிஞ்சிய யோகமும், கொடுப்பினையும் இருந்தால் சித்தர்களின் அருளை பெறலாம்.

அதேபோல், சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வந்தாலும் அவர்களது அருளை பெற்றிடலாம்.

அணிமா

அணுவைப் போல் மிக சிறிய வடிவம் எடுத்து யாருக்கும் தெரியாமல் இருப்பதாகும்.

மகிமா

மலையைப் போல் பெரிதாக வளர்ந்து அசுர வளர்ச்சி எடுப்பதாகும்.

இலகிமா

காற்றைப் போன்று மிக இலேசாக இருப்பதாகும்.

கரிமா

எவ்வளவு காற்றுக்கும், புயலுக்கும் அசையாமல் கனமான இரும்பு, மலை போன்று உடலை கனமாக்குவதாகும்.

பிராப்தி

அனைத்தையும் தன்வசப்படுத்தி, நினைப்பதை அடைவதாகும்.

ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளிக்கும் திறன் பெற்றது.

பிரகாமியம்

தனது உடலை விட்டு வேறு உடலில் செல்வதாகும். கூடு விட்டுக் கூடு பாயும் திறன் கொண்டது.

வசித்துவம்

உலகில் உள்ள அனைத்தையும் தன் வசப்படுத்துவதாகும்.

ஈசத்துவம்

தனது விருப்பப்படி எல்லோரையும் ஆட்டுவித்து, உலகை படைப்பதாகும்.

அஷ்டாங்க யோகங்களுக்கு சூத்திரம் எழுதியவர் யார் என்பதை உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on