அரச மரத்தை வெட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள்?

மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன் என்று கிருஷ்ண பரமாத்மா கூறியதில் இருந்தே அதன் மகிமையையும், சிறப்பையும் நாம் உணரமுடியும். மேலும், கோயில்கள், சுப நிகழ்ச்சிகளில் செய்யப்படும் யாகம், ஹோமம் போன்றவற்றில் அரச மரத்தின் குச்சிகள், வேர்கள், காய்ந்த இலைகள் என அதன் அனைத்து பாகங்களும் உபயோகிக்கப்படுகின்றன. அதனால் அரச மரம் மிகவும் புனிதம் வாய்ந்த மரமாக கருதப்படுகின்றது. அத்தகைய புனிதமான மரத்தை வெட்டலாமா, அவ்வாறு வெட்டினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்றும் அதன் சிறப்பு மற்றும் வரலாறு குறித்து தெரிந்து கொள்வோம்.

வரலாறு

சிவபெருமானுடைய வியர்வையிலிருந்து ருத்ராட்சம் தோன்றியது போல, நாராயணனின் வலது கண்ணிலிருந்து தோன்றியது அரச மரமாகும்.

அரச மரத்திற்கு வடமொழியில் “அஸ்வத்தா” என்றொரு பெயருண்டு.

அஸ்வத்தா என்றால் நம்பிக்கையோடு வழிபடுபவர்களின் பாவங்களை போக்குபவள் என்பது பொருளாகும்.

மேலும், தன்னை வழிபடுபவர்களுக்கு வேண்டிய வரங்களை கொடுப்பவள் என்றும் நம்பிக்கையாகும்.

அதனால்தான், அரச மரம் இறைவனோடு தொடர்பு கொண்டதாக இருக்கிறது.

சிறப்பு

அரச மரத்தில் மும்மூர்த்திகளும் வாசம் செய்வதாக ஐதீகம். அதன் அடிப்பாகத்தில் பிரம்ம தேவரும், நடு பாகத்தில் விஷ்ணுவும், மேல் பாகத்தில் சிவபெருமானும் இருப்பதாக நம்பிக்கை.

மற்ற மரங்களைப்போல் இல்லாமல், அரச மரம் நாள் முழுவதும் நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் வாயுவை வெளியிடுகிறது.

குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், காலையில் வெறும் வயிற்றில் அரச மரத்தை சுற்றி வரும்போது, கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை ஏறபடுத்தி கொடுக்கிறது.

திங்கட்கிழமை வரும் அமாவாசை தினத்தன்று அரச மரத்தை காலை 11 மணிக்குள் 108 முறை சுற்றி வருவது பெரும் புண்ணியமாகும்.

அரச மரம் இருக்குமிடங்களில் லட்சுமி தேவி வாசம் புரிவதால் செல்வசெழிப்பு ஏற்படும்.

அதற்கு உதாரணமாக, அரச மரம் அருகில் இருக்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், அலுவலகம், வீடு போன்றவைகள் செல்வசெழிப்பாக இருப்பதை காணலாம்.

விளைவுகள்

தெய்வீகம் சார்ந்த மரமாக கருதப்படுகிற அரச மரத்தை வெட்டுவதே பாவ செயலாகும்.

அதனால், தலைமுறைக்கும் பாவம் தொடர்ந்து, குடும்பம் விருத்தியில்லாமல் போகும்.

தொழில் நசிந்து வறுமை குடிகொள்ளும், குடும்பத்தினர், உறவினர், நண்பர்களிடையே அவமானம், பழிச்சொல் ஏற்படும்.

சுற்றுப்புற சூழல் சீர்கெடும், தொடர்ந்து மோசமான விளைவுகள் ஏற்படும்.

அரசமரத்தை வெட்டுவதால் துர்மரணம், வறுமை, தீராத பிணி போன்றவைகள் ஏற்படுமென்று திருமுட்ட புராணம் என்ற பண்டைய நூல் எச்சரிக்கை செய்கிறது.

எனவே அரசமரத்தை வெட்டினாலும், அவமரியாதை செய்தாலும் பாவம் ஏற்படும்.

தெய்வீக மரமாக கருதப்படுகிற அரச மரத்தை வெட்டுவதால் என்ன பாதிப்புகள் வரும் என்பதை எல்லோரும் அறிந்திட செய்யுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on