ஜோதிட சாஸ்திரப்படி ஆயுள் ரகசியங்கள்?

மனிதர்களின் பிறப்பின் ரகசியமும், ஆயுள் ரகசியமும் இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஒருவரது ஜாதகத்தை கொண்டு அவரது ஆயுள் எப்படி இருக்கும் என்பதை ஜாதகம் மூலமாக ஓரளவிற்கு கணிக்க முடியும். அதன்படி, ஒரு ஜாதகத்தில் 8-ஆம் இடத்தில் உள்ள கிரகங்களை வைத்தும், 8-ஆம் அதிபதி யாருடன் சேர்க்கை பெற்று இருக்கிறார் என்பதை பொறுத்தும் ஒருவரது ஆயுளை கணிக்கலாம் என ஜோதிட சாஸ்திரம் தெளிவாகக் கூறுகிறது. அதையடுத்து, 8-ஆம் இடத்தில் எந்தெந்த கிரகங்கள் இருந்தால் என்னென்ன நிகழும் என்பதை பார்க்கலாம்.

ஜாதக அமைப்பு

சூரியன் 8-ஆம் இடத்தில் இருந்து சுப கிரக பார்வைகள் எதையும் பெறாமல் இருக்கும் பட்சத்தில் அரசு தண்டனைகளுக்கு ஆளாக நேரிடலாம், சில சமயங்களில் நெருப்பாலும், வாகனங்கள் மூலமாகவும் கூட இறப்பு நேரிடுமென சொல்லப்படுகிறது.

சந்திரன் 8-ஆம் இடத்தில் இருந்து சுப கிரக பார்வைகள் எதையும் பெறாமல் இருக்கும் பட்சத்தில் நீர் நிலைகளுக்கு அருகிலோ அல்லது பயணத்திலோ அல்லது வெளி ஊர்களில் அல்லது வெளி நாட்டில் கூட மரணம் நிகழும். சிலருக்கு நீரழிவு நோய் அல்லது தண்ணீரால் வரும் நோய்களாலும் கூட இறப்பு நிகழலாம்.

செவ்வாய் 8-ஆம் இடத்தில் இருக்கும் பட்சத்தில் ஆயுதம், நெருப்பு போன்றவற்றாலும். சண்டை சச்சரவுகளாலும் காயம் பட்டு இறப்பு நிகழ இடம் உண்டு.

புதன் 8-ஆம் இடத்தில் இருந்து சுப கிரக பார்வைகள் எதையும் பெறாமல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் நோயினால் அவஸ்தை பட்டு இறக்கலாம்.

குரு 8-ஆம் இடத்தில் இருந்து சுப கிரக பார்வைகள் எதையும் பெறாமல் இருக்கும் பட்சத்தில் கொலஸ்ட்ரால், மாரடைப்பு போன்ற பிரச்சனைகளால் இறக்கலாம்.

சுக்கிரன் 8-ஆம் இடத்தில் இருந்து சுப கிரக பார்வைகள் எதையும் பெறாமல் இருக்கும் பட்சத்தில் சுகமான இறப்பும் மருத்துவமனை போன்ற இடங்களில் பலர் சேவை செய்ய இறப்பும் நிகழும்.

சனி 8-ஆம் இடத்தில் இருந்து சுப கிரக பார்வைகள் எதையும் பெறாமல் இருக்கும் பட்சத்தில் இறப்பிற்கு நிகரான போராட்டங்களை கடந்து நீண்ட நாட்கள் வாழ்ந்து முதுமையின் காரணமாக உயிர் இழப்பார்கள்.

ராகு அல்லது கேது 8-ஆம் இடத்தில் இருந்து சுப கிரக பார்வைகள் எதையும் பெறாமல் இருக்கும் பட்சத்தில் விபத்து, விஷ ஜந்துக்கள், தற்கொலை, விஷம் போன்ற ஏதேனும் ஒன்றால் இறப்பு நிகழலாம்.



Follow Us on