
ஆகாயத்தாமரை என்றவுடன் அழகான மலர் என்று நினைத்து மகிழ்ச்சி கொள்ள வேண்டாம். அது நமது நீரை எவ்வளவு குறைக்கிறது என்று தெரியுமா? இதனால், நமது நீர்வளம் எவ்வாறு குறைகிறது என்றும், அதனை எவ்வாறு சரி செய்யலாம் என்றும் தெரிந்து கொள்ளலாம்.
ஆகாயத்தாமரை
இயற்கையாகவே வெயிலின் காரணமாக நீர் ஆவியாகும் தன்மை கொண்டது. இதில் ஆகாயத் தாமரையின் பங்கு அதிகமாகவே உள்ளது. இவை பொதுவாக கழிவு நீர்நிலைகளில் அதிகம் வளரக் கூடிய தன்மை கொண்டது. இந்த தாவரம் ஒரு நாளைக்கு 1 லிட்டர் நீரை ஆவியாக்கும் தன்மை கொண்டது. இதன் காரணமாக, நீர் நிலைகளின் நிலையானது குறைந்து கொண்டே வருகிறது.
என்ன வழி?
நீர் நிலைகளை பாதுகாக்கவும், ஆகாயத்தாமரையின் வளர்ச்சியை கட்டுப் படுத்துவதற்காகவும் சில வழிகள் உள்ளது.
பெரும்பாலும் மனிதர்கள் நேரடியாகவோ அல்லது இயந்திரங்கள் மூலமாகவோ தாமரையை நீரிலிருந்து அகற்றுவார்கள்.
இந்த வேலையை விடுத்து AG11 எனும் அங்கக திரவத்தை தாமரையின் மீது தெளித்தால் 10 லிருந்து 15 நாட்களில் செடிகள் காய்ந்து விடும்.
பிறகு, அந்த தாவரத்தை எடுப்பது மிகவும் எளிதாகும். நீரிலிருந்து வெளியே எடுத்த தாமரைச்செடிகளின் தண்டு பகுதிகள் மட்டும் பச்சையாக இருக்கும்.
அதன்மீது, மீண்டும் ஒருமுறை AG11. திரவம் தெளித்து காய வைத்து ஆங்காங்கே திட்டு திட்டாக அடுக்கி வைக்க வேண்டும்.
பின், அவற்றில் மண்புழுக்களை விட்டு மண்புழு உரமாக மாற்றினால். நுண்ணூட்டம் சத்துக்கள் நிறைந்த உரமாக மாறும்.
வளர்வதை தடுத்தல்
ஆகாயத்தாமரையை அகற்றிய நீரில் நுவால்கி என்னும் நுண்ணூட்ட திரவத்தை தெளிப்பதன் மூலம் ஆகாயத்தாமரைச் செடிகள் வளர்வதை தடுக்க இயலும்.
மேலும், நுவால்கியானது டையாட்டம் எனும் மிகச் சிறிய பாசிகளை வளரச் செய்யும். டையாட்டம் மீனுக்கு மிக சிறந்த உணவாகப் பயன்படுகிறது.
வருடத்திற்கு நான்கு முறை நுவால்கி திரவத்தை தெளிப்பதன் மூலம் நீரில் எவ்வளவு கழிவுநீர் கலந்தாலும், ஆகாயத்தாமரை வளராது.
மேலும், நீர்நிலைகளும் சுத்தமாகும். இதனால், நீர்நிலைகளை பாதுகாப்பு உயருகிறது.
நீர்வளத்தை குறைக்கும் ஆகாயத்தாமரை பற்றி உங்களது நண்பர்களுக்கும் பகிருங்கள்.(ஷேர்)