27 நட்சத்திரத்திற்குரிய பூக்கள்
தெய்வங்களை வழிபடும்போது அந்தந்த தெய்வங்களுக்குரிய பூக்களை அணிவித்து வழிபட அந்த தெய்வத்தின் அனுக்கிரகத்தை பெறுவதுடன், தடையில்லா வெற்றியும், காரியவிருத்தியும் கிடைக்கும். இந்நிலையில், நட்சத்திர மண்டலத்தில் இருக்கின்ற 27 நட்சத்திரங்களுக்கு எந்த பூக்களை அணிவிப்பது நல்லது என்று தெரிந்து அதற்குரிய நாளில் அந்த பூக்களால் இஷ்ட தெய்வம் அல்லது அதிபதி தெய்வத்தை வழிபட்டால் வாழ்வில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்பது பிரபஞ்ச விதியாகும். ஏனெனில் பிரபஞ்ச இயக்கத்திற்கு கட்டுப்பட்டே கிரகங்களின் சுழற்சி இருப்பதால், அதன் இயக்கத்தை கவனித்து அதை திருப்திபடுத்தும்போது அசாத்திய வெற்றியை காணலாம்.
அதிபதிகள்
நட்சத்திர மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களுக்கும் ஒவ்வொரு அதிபதி தெய்வமாக இருப்பார்கள்.
அந்த தெய்வங்களை தொடர்ந்து அந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட்டு வரும்போது அவர்களுடைய செல்வ நிலை நிச்சயமாக உயரும்.
ஒரு சிலருக்கு சில இஷ்ட தெய்வம் இருக்கும். அவர்கள் அந்த இஷ்ட தெய்வங்களை மட்டுமே நம்பிக்கையோடு வணங்குவார்கள்.
இந்நிலையில், நட்சத்திர அதிபதி அல்லது இஷ்ட தெய்வம் அல்லது மகாலட்சுமியை அந்த நட்சத்திர தினத்தன்று வணங்கும்போது அதற்குரிய பூக்களை கொண்டு வழிபாடு செய்வது விசேஷமானது.
அவ்வாறு தொடர்ந்து செய்து வர மிகப்பெரும் அதிர்ஷ்டத்தை பெறுவதுடன் பெரும் செல்வத்திற்கு அதிபதியாகலாம்.
நம்பிக்கையுடன்
அவரவர் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து வருவது அதிர்ஷ்டத்தை தேடி வர செய்யும்.
அதனால், பெரும்பாலானோர் மகாலட்சுமியை அதிர்ஷ்டம் தரும் தேவியாக கருதி வழிபடுகின்றனர்.
பௌர்ணமி தினம், வெள்ளிக்கிழமை அல்லது, பூரம் நட்சத்திரம் வரும் நாளில் தங்கள் நட்சத்திரத்திற்குரிய பூக்களை வாங்கி மகாலட்சுமியை வணங்கினால் செல்வ நிலை உயரும், வியாபாரம் செழிக்கும்.
மேலும், மகாலட்சுமியை வணங்கும்போது சந்தனம், ஜவ்வாது, குங்குமம் போன்றவற்றை வைத்து வழிபட வேண்டும்.
மகாலட்சுமிக்கு பிடித்த இனிப்பு வகை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு போன்றவற்றில் ஏதாவது ஒன்றை நிவேதனமாக வைக்க வேண்டும்.
அத்துடன், மகாலட்சுமியின் ஸ்வரூபமாக இருக்கும் நெல்லிக்கனியை கட்டாயம் வைத்து உங்கள் நட்சத்திரத்திற்குரிய பூக்களை கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.
நட்சத்திரத்திற்குரிய பூக்கள்
அஸ்வினி: சாமந்தி
பரணி: முல்லை
கார்த்திகை: செவ்வரளி
ரோகிணி: பாரிஜாதம்
மிருகசீரிஷம்: ஜாதி மல்லி
திருவாதிரை: வில்வப்பூ
புனர் பூசம்: மரிக்கொழுந்து
பூசம்: பன்னீர் ரோஜா
ஆயில்யம்: செவ்வரளி
மகம்: மல்லிகை
பூரம்: தாமரை
உத்திரம்: கதம்பம்
அஸ்தம்: வெள்ளை தாமரை
சித்திரை: மந்தாரை
சுவாதி: பொன் அரளி
விசாகம்: இருவாட்சி
அனுஷம்: சிவப்பு முல்லை
கேட்டை: பன்னீர் ரோஜா
மூலம்: வெள்ளை சங்குப்பூ
பூராடம்: விருட்சி
உத்திராடம்: சம்பங்கி
திருவோணம்: சிவப்பு ரோஜா
அவிட்டம்: செண்பகம்
சதயம்: நீலோற்பவம்
பூரட்டாதி: வெள்ளை அரளி
உத்திரட்டாதி: நந்தியாவட்டம்
ரேவதி: செம்பருத்தி
நட்சத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் என்னென்ன பூக்கள் அணிவிப்பது சிறந்தது என்பதை உறவினர்களும், நண்பர்களும் அறிந்திட செய்யுங்கள் (ஷேர் செய்யுங்கள்).