கல் தோன்றி மண் தோன்றா காலத்தே மூத்த மொழி என்ற சிறப்பு கொண்ட தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் அனைவரும் தமிழராக பிறந்ததில் பெருமை கொள்ளவேண்டும். மேலும், தமிழ் மொழி தெய்வீக மொழி என்ற சிறப்பையும் கொண்டது. ஏனெனில், தமிழ் கடவுள் என்று அழைக்கப்படுகிற முருகனை விரும்பாதவர்கள் உலகில் எவரும் கிடையாது. அத்தகைய சிறப்புடைய தமிழ் மொழியின் சிறப்புகளை அறிந்திடலாம்.
23 இலக்க எண்கள்
உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் எண்களுக்கு பெயருண்டு.
சாதாரணமாக, எல்லா மொழிகளிலும் 10 முதல் 12 இலக்கம் வரை கொண்ட எண்களுக்கு பெயர் இருப்பதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
உலக மொழி என்று பெரிதாக போற்றப்படுகிற ஆங்கில மொழியில் கூட 18 இலக்க எண்களுக்கு மட்டுமே பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தமிழ் மொழியில் மட்டுமே 23 இலக்க எண்களுக்கு பெயர் இருப்பது தமிழ் மொழியின் தனி பெருமையாகும்.
1 - ஒன்று
10 - பத்து
100 - நூறு
1,000 - ஆயிரம்
10,000 - பத்தாயிரம்
100,000 - லட்சம்
10,00,000 - பத்து லட்சம் – one million
100.00,000 - கோடி - ten million
1000,00,000 - அற்புதம் (பத்து கோடி) - hundred million
10,00,00,00,00 - நிகற்புதம் (நூறு கோடி) – one billion
1000,00,00,000 - கும்பம் (ஆயிரம் கோடி) - ten billion
10,000,00,00,000 - கணம் (பத்தாயிரம் கோடி) - hundred billion
100,000,00,00,000 - கற்பம் (லட்சம் கோடி) - one trillion
10,00,000,00,00,000 - நிகற்பம் (பத்து லட்சம் கோடி) - ten trillion
100,00,000,00,00,000 - பதுமம் (கோடி கோடி) - hundred trillion
1000,00,000,00,00,000 - சங்கம் - one zillion
10,000,00,000,00,00,000 - வெல்லம் - ten zillion
100,000,00,000,00,00,000 - அந்நியம் - hundred zillion
10,00,000,00,000,00,00,000 - அர்த்தம் -?
100,00,000,00,000,00,00,000 - பரார்த்தம் -?
1000,00,000,00,000,00,00,000 - பூரியம் -?
10,000,00,000,00,000,00,00,000 - முக்கோடி -?
100,000,00,000,00,000,00,00,000 - மகாயுகம் -?
அதேபோல், 22 இலக்க எண்களில் 1 பங்கிற்கு பெயர் வைத்த மொழியும் உலகில் தமிழ் மொழி மட்டுமேயாகும்.
22 இலக்க எண்களில் 1 பங்கு
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டு பிறந்துள்ள தமிழர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயமாகும்.
அதுவும், நாளை மறுநாள் பிறக்கவுள்ள விசுவாவசு தமிழ் புத்தாண்டு முதல், தமிழ் மொழிக்கு நாம் என்றும் விசுவாசமாக இருப்பதுடன், இன்னும் பல தலைமுறையினர் தமிழ் மொழியை வளர்ப்பதற்கு நாம் என்றும் துணையாக இருக்கவேண்டும்.
உலகம் முழுவதும் பேசப்படுகிற மொழியான ஆங்கிலத்தில் கூட பெயர் வைக்க முடியாத எண்களுக்கு, பெயர் வைத்த சிறப்புடையது தமிழ் மொழி என்பதை உங்கள் உறவினர்களும், நண்பர்களும் அறிந்திட செய்யுங்கள் (ஷேர் செய்யுங்கள்).