download_indicator

பட்ஜெட் 2026–27: விலை ஏற்றம்–இறக்கம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரி 1 அன்று 2026–27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது இவருடைய 9 ஆம் பட்ஜெட் தாக்கல் ஆகும். இவற்றில் என்னென்ன செயல்முறைகளை கையாள போவதாக கூறியுள்ளார் என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.

எதற்கெல்லாம் வரி குறைப்பு?

புற்றுநோய் மருந்துகளுக்கான வரி

ஏழு அரிய வகை நோய்களுக்காக எடுக்கப்படும் சகிச்சை வரி

மின்சார வாகனங்களுக்கான விலை

வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதற்கான பேக்கேஜ்

வெளிநாட்டு கல்வி செலவுகள் - 0.5% லிருந்து 0.2% குறைவு

மைக்ரோ ஓவன்கள், தொலைப்பேசி உற்பத்திக்கான உபகரணங்கள், தோல் பொருட்கள், கேமராக்கள், ஜவுளி பொருட்கள்

சூரிய மின் தகடு(solar panel)

விமான உற்பத்திக்கான பாகங்கள்

தனிப்பட்ட காரணத்திற்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள்

போன்றவைகளுக்கு வரி குறைப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதற்கெல்லாம் வரி உயர்வு?

வர்த்தகத்தின் மீதான வரி 0.02% லிருந்து 0.05% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அசையும் சொத்துகளை பதுக்கி வைப்பவர்களுக்கு அபராதம்

வருமான வரி தகவல்களை தவறான தெரிவித்தால் அந்த வரிக்கு ஈடாக 100% அபராதம்

விளையாட்டு பொருட்களுக்கான(பேட், பூட் பால்) வரி

வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் காபி வெண்டிங் இயந்திரம்

உரம், கனிமங்கள், நிலக்கரி

சிகிரெட், குட்கா, மதுபானங்கள்

வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் குடைகள், அதிக விலையுடன் கூடிய கை கடிகாரம் போன்றவைகளுக்கு வரி உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பசங்கள்

எளிமையான வரி செலுத்தும் முறை - இதுவரை ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு முறையும் கொடுக்கப்பட்ட 15G மற்றும் 15H படிவங்கள் கொடுக்கப்பட வேண்டியதில்லை. ஒருமுறை சமர்பித்தாலே போதுமானது. பொது காப்பகங்கள் மூலம் அனைத்து இடங்களுக்கும் அனுப்பப்படும்.

வருமான வரி கணக்கில் திருத்தங்கள் செய்வதற்கு கொடுக்கப்பட்ட டிசம்பர் 31 கால அவகாசமானது, தற்போது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வரி தாக்கல் செய்யும்போது செர்வர் டவுன் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருப்பதால், ITR 1 மற்றும் 2 - ஜூலை 31 வரையும், வணிக நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 31 வரை என வெவ்வேறு தேதிகளை கொடுத்துள்ளார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பெண்கள் விடுதி அமைக்கப்பட உள்ளது.

AI- தொழில் நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆய்வகம்(லேப்) வசதி அமைக்கப்பட உள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள்(NRI) வெளிநாட்டு சொத்துகளை அறிவிக்க தவறி இருந்தால், ஒருமுறை மட்டும் ஆறு மாத அவகாசம் கொடுக்கிறார்கள். அதேபோல் இவர்கள் இந்தியாவிலுள்ள சொத்துகளை வாங்கவோ அல்லது விற்கவோ முன்பெல்லாம் TAN NUMBER தேவை. ஆனால், தற்போது வெறும் PAN CARD இருந்தாலே போதும்.

மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தொகைக்குரிய வட்டிக்கு வருமான வரி கிடையாது.

சென்னை - பெங்களூரு மற்றும் ஹைதராபாத் - சென்னை இரயில் சேவை அதிகரிக்க உள்ளது.

ஆதிச்சநல்லூரில் தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்த(கீழடி அகழாய்வு பொருள்காட்சி) நடவடிக்கை எடுத்துள்ளது.

இவற்றில் மக்கள் ஆவலாக எதிர்பார்த்த தங்கம் வெள்ளி விலை குறையாதது வருத்தத்திற்குரிய விஷயம்!

இவற்றில் உங்களுடைய நண்பர் அல்லது குடும்பத்தினர் விரும்பியது ஏதேனும் இருந்தால், அவருக்கு இந்தக் கட்டுரையை உடனே அனுப்புங்கள்.(ஷேர்)



Follow Us on