2025 புத்தாண்டு வாழ்த்துக்கள்

நம்பிக்கை மற்றும் ஆற்றல் நிறைந்ததாக வருகிற 2025 புத்தாண்டு இருக்க வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமாகும். அதனால், வரப்போகின்ற புத்தாண்டு அனைவருக்கும் இனிமையை கொடுக்கும் புத்தாண்டாக இருந்திட வாழ்த்துவோம்.

தடைகளை தகர்க்கும்

2025 புத்தாண்டில், விரும்பியது அனைத்தும் கிடைத்து, வாழ்வில் என்றும் சந்தோஷமும், நிம்மதியும் கிடைத்திட வேண்டும் என்று வாழ்த்த வேண்டும்.

உழைப்பவர்களின் மேன்மையை, சிறப்பை தெரிவிக்கும் விதமாக, உழைப்பதால் கிடைக்கும் முன்னேற்றத்தை குறிப்பிட்டு வாழ்த்து தெரிவிக்க வேண்டும்.

முயற்சியும், உழைப்பும் இருப்பவர்களுக்கு தடைகளை தகர்க்கும் வலிமை கிடைக்கும் என்பதை உணர்த்த வேண்டும்.

புதுமைகள் தொடர்வதன் மூலமாக, மாற்றங்கள் ஏற்பட்டு எல்லோருடைய வாழ்விலும் மகிழ்ச்சி வரும் என்ற உற்சாகத்தை வலியுறுத்த வேண்டும்.

வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம் என அனைத்தையும் சமமாக பாவிக்கும் மனப்பான்மையை புத்தாண்டு வழங்கட்டும் என்று அறிவுறுத்த வேண்டும்.

யார், யாருக்கு

புத்தாண்டு வாழ்த்து யார், யாருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.

நமக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் வாழ்த்து தெரிவிப்பது தானே முறை என்று பலரும் எண்ணக்கூடும்.

தெரிந்தவர், தெரியாதவர், அறிந்தவர், அறியாதவர், கடைநிலை பணியாளர், துப்புரவு பணியாளர், பேருந்து ஓட்டுனர், காவலாளிகள், காவல் பணியாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கலாம்.

ஒருவருக்கு வாழ்த்து தெரிவிப்பதால், வாழ்த்து பெறுபவரும், வாழ்த்துபவரும் மட்டுமன்றி, அந்த இருவரின் சுற்றுப்புறத்திலும் நேர்மறை எண்ணங்கள் நிரம்பி நல்லதே நடைபெறும்.

அதனால், 2025 புத்தாண்டு வாழ்த்துக்களை குடும்பத்தினர், உறவினர், நண்பர், சக பணியாளர், தம்மிடம் பணிபுரிபவர் என்றில்லாமல், எதிரியாக இருப்பவருக்கும் கூட வாழ்த்து தெரிவிப்பது நல்லது.

அவ்வாறு எதிரியாக கருதியவர், எதிர்பாராமல் கிடைக்கின்ற வாழ்த்தை கண்டு ஆதரவாளராக, நண்பராக மாறும் வாய்ப்பு அதிகம் உண்டு.

கொண்டாட்டம்

புத்தாண்டு கொண்டாட்டம் என்பது புது வருடம் பிறக்கும்போது, இரவு 12 மணிக்கு ஆட்டம், பாட்டத்தோடு முடிவதல்ல, ஆண்டு முழுவதும் இருக்க வேண்டும்.

அதற்கு புதிய லட்சியங்களும், தீர்மானங்களும் நிறைவேற்றி முடிப்பதாக சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல், புது வருடத்தில் ஏதாவது புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு அதை வாழ்வில் கடைபிடிக்க முன்வர வேண்டும்.

மேலும், சக மனிதர்களிடம் ஏற்ற தாழ்வின்றி பழகவும், அனைத்து உயிர்களிடமும் அன்பு, கருணை காட்ட முன்வர வேண்டும்.

அனைவருக்கும் இனிய 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

புத்தாண்டு நல்வாழ்த்துக்களை உங்கள் உறவினர்களும், நண்பர்களும் அறிந்திட செய்யுங்கள் (ஷேர் செய்யுங்கள்).

 
 


Follow Us on