தி. சு. சதாசிவம் மார்ச் 15-ஆம் நாள் 1938-ஆம் வருடம் பிறந்தார். தமிழக எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், நடிகரும் ஆவார். கலை, இலக்கியம், முற்போக்கு அரசியல் இயக்கங்கள் என்று பல துறைகளில் அறியப்பட்டவர்.
பல திரைப்படங்களிலும், பத்துக்கு மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
1997-இல் சாரா அபுபக்கரின் சந்திரகிரி ஆற்றங்கரையில் என்ற புகழ்பெற்ற கன்னடப் புதினத்தை மொழிபெயர்த்ததற்காக சாகித்திய சாகித்ய அகாடமி வழங்கப்பட்டது.
இவர் பிப்ரவரி 5-ஆம் நாள் 2012-ஆம் வருடம் காலமானார்.