download_indicator

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2026

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு தேர்வில் மாணவ, மாணவிகள் சிறப்பான தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளனர்.

மொத்த தேர்ச்சி விகிதம்

இந்த ஆண்டு 7,91,654 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 7,53,694 பேர் தேர்ச்சி பெற்று, மொத்த தேர்ச்சி விகிதம் 95.20 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 0.17 சதவீதம் உயர்ந்துள்ளது.

மாணவிகள் 97% தேர்ச்சி பெற்று முன்னிலை வகித்துள்ளனர். மாணவர்கள் 93.19% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்ட வாரியான சாதனை

அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்களில் ஈரோடு முதலிடம் பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து சிவங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் திருச்சி மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

பாட வாரியான தேர்ச்சி

பாட வாரியாக பார்க்கும்போது கணினி அறிவியல் பாடத்தில் 99.84% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. அதேபோல் தமிழ் பாடத்தில் 83 மாணவர்கள், ஆங்கிலத்தில் 21 மாணவர்கள், உயிரியல் பாடத்தில் 784 மாணவர்கள், கணினி அறிவியலில் 6,945 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை

அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92.16% ஆக உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகள் 96.14% தேர்ச்சி பெற்றுள்ளன. தனியார் பள்ளிகள் 98.72% தேர்ச்சி பெற்றுள்ளன.

சிறப்பு தகவல்கள்

100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகள் – 2,639

95% மேல் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் – 5,170

மாற்றுத்திறனாளி மாணவர்களில் 95.20% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிறைவாசிகளில் 95.20% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மாணவர்களின் கடின உழைப்பையும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



Follow Us on